கடலன்

கடலன் என்பவன் சங்ககால அரசன்
இவன் விளங்கில் நாட்டை ஆட்சி செய்தவன்

விளங்கில் நாடு முத்தும் சங்கும் விளையும் அரபிகடல் ஓரம் அமைந்த நாடு 


அகநானூறு 81


ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்னஎம்
மை எழில் உண்கண் கலுழ
ஐயசேறிரோஅகன்று செய் பொருட்கே?      15

பிரிவு உணர்த்திய தலைமகற்குதோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது.
ஆலம்பேரி சாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


விளக்கம் 
விளங்கில் நகரில் இருந்துகொண்டு அரசாண்ட மன்னன் கடலன்

அவன் மின்னும் வேல் தழைத்திருக்கும் காட்டில் (போர்க்களத்தில்) தாக்கும் படையானைகளைக் கொன்று வெற்றி கண்டவன். மா பெருங் கொடையாளி

அவனது ஊர் விளங்கில் போன்ற அழகு கொண்டவள் தலைவி. அவளது மை தீட்டிய அழகிய கண் கண்ணீர் விட்டுக் கழுலும்படி விட்டுவிட்டு பொருள் தேடிவரச் செல்கிறீர்களா?  

இவனுடைய விளங்கில் நாடு அழகுடையது என்றும்
 மின்னும் வேல்களை கொண்டு படையானைகளை கொன்று வெற்றிகளை கண்டன் என்றும் 
இவம் மாபெரும் கொடையாளி என்றும் இப்பாடல் கூறுகிறது

புறநானூறு 53

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற

களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து

வாழேம் என்றலும் அரிதே; தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்

பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.

விளக்கம் 

முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், 


(இலங்குவளை) சங்கு வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும்  சீர்மையையுடைய விளங்கிற்குப் 
பகைவரான் வந்த இடும்பையைத் (துண்பத்தை) தீர்த்த
போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரைந்த குதிரையையும் உடைய பொறையனே

(விழுமம் கொன்ற = துன்பத்தை போக்கிய 
விழுமம் = இடும்பை,  துன்பம் )


உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; 

சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும்.

 ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. 

அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். 

”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். 

உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.

இந்த பாடல் மூலம் கடலன் சேரர் ஆட்சிக்குட்பட்டவர் என்பது தெளிவு



 (சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் 
இருந்த இந்த ஊரைச் 
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 
சூறையாடித் தன் நாட்டுடன் 
சேர்த்துக்கொண்டான் என்னும் 
விக்கிப்பீடியாவில் சிலர் எழுதுகின்றனர்

விழுமம் என்பதற்குச் சிறப்பு,
 இடும்பை என்ற இரு பொருளும் 
இருப்பதால் இவ்வாறு கருத்துக்கள்
மாறுபடுகின்றன.

சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையின் 
ஆட்சிக்குட்பட்டிருந்த விளங்கில் 
என்னும் ஊரைப் பகைவர்
முற்றுகையிட்டு வருத்தமுறுவித்தாராக, 
இவன் யானைப்படையும், குதிரைப்படையும் 
சிறப்புறக்கொண்டு
சென்று பகைவரை வெருட்டி 
விளங்கிலரை உய்வித்தனன் 
என்பர் ஔவை.சு.துரைசாமி)

நன்றி 
கொற்கை கொண்கன்



 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்