சோழ மறவன்

 

வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி

இவர் சோழ நாட்டில்  ஆட்சி செய்த சங்ககால அரசர் ஆவார் 

கழார் முன்துறையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த அரசர் 

இவர் கரிகால பெருவளத்தானின் தளபதியாகவும்  சோழ மறவராகவும் இருந்துள்ளார் 

இவரை பற்றிய பாடல் 

அகநானூறு 226

வல் வில் எறுழ்த் தோள்பரதவர் கோமான்,
பல் வேல் மத்திகழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,            10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வைஇந் நாள்,


இதன் விளக்கம் 

இப்படி மகளிர் விளையாடும் ஊர் கழார்
அந்த ஊரின் அரசன் மத்தி
அவன் பல வேல்களை வைத்துக்கொண்டு போராடும் வல்லமை மிக்கவன். 
அவன் பரதவர் குடிமக்களின் தலைவன். 
அந்தப் பரதவர் வில்லாற்றல் கொண்ட தோளினை உடையவர்.

இந்த பாடலின் மூலம் இவன் வில்லாற்றல் போராற்றல்  மிக்கவன் 
இவன் பரதவர் குடியை சேர்ந்தவன் என்று பாடல் கூறுகிறது 


அகநானூறு 222


முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,        5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,


இதன் விளக்கம் 


முழவு முழக்கத்துடன் நீராட்டு விழா. 
காவிரி ஆற்றில் கழார் என்னும் ஊரின் துறையில் நீராட்டுவிழா. 
ஆட்டன் அத்தி நீச்சல் நடனம் ஆடினான். 
அழகெல்லாம் குடிகொண்டிருந்த மார்பினை உடையவன் ஆட்டனத்தி

ஆட்டன் அத்தி என்பவனை கரிகாலனின் மகள் ஆதிமந்தி என்பவள் விரும்புகிறாள்
இவள் கழார் முன்துறையில் ஒரு நீராட்டு 
விழாவில் நடனம் ஆடுகிறாள் 
இதில் இருந்து  வல்வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி அரசர் சோழ ஆட்சிக்கு உட்பட்டவர் என தெரிகிறது 

அகநானூறு211


கேளாய்எல்லதோழிவாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
தண் மழை ஆலியின் தாஅய்உழவர் 5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்நல்குவர்
2
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,             10
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,               15
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழியஅழப் பிரிந்தோரே.


இதன் விளக்கம் 



பல்லைப் பிடுங்கிய வரலாறு

1

ஒளி மிக்க தோழி! (எல்ல) இதைக் கேள். 


வெள்ளைச் சுண்ணாம்பு விரிந்து கிடப்பது போல மரா மரம் பூக்கும். 


முழக்கும் பறை போல் காலடியும், வலிமை மிக்க கொம்பும் கொண்ட யானை அதில் தன் தோலை உரசும். 

அப்போது மழைப் பனிக் கட்டிகள் கொட்டுவது போல மராம் பூக்கள் உழவர் காயவைத்திருக்கும் நெல் விதையின் மேல் உதிரும். 


இப்படி உதிரும் நாடு வேங்கடம். 

அதனைத் தாண்டிச் சேன்றால் தமிழ் அல்லாத வேற்றுமொழி பேசப்படும் நிலம். 


உன்னைப் பிரிந்து சென்றவர் வேற்றுமொழி பேசும் இடத்துக்குச் சென்றிருந்தாலும் விரைவில் திரும்பி வந்து உனக்கு அளி செய்வார்.

2

கன்றுகளை உடைய யானைக் கூட்டம் வழியில் குழி இருப்பதைப் பார்த்து பின்னே வரும் பெண்யானை விழாமல் இருக்க ஒலி எழுப்பும். 


வேந்தன் கடுமையான சினத்துடன் எச்சரித்தும் கேளாமல் போர்த்தொழில் கல்லாத எழினி தொலைநாடு சென்று தாக்கிப் பிடிபட்டுக்கொண்டான். 


அரசன் மத்தி அவன் பல்லைப் பிடுங்கித் தன் வெண்மணி-வாயில் கோட்டைக்கதவில் பதித்துக்கொண்டான். 


இதில் இருந்து நாம் தெரிவது

 

வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி 
தன் எதிரி எழினி என்பவனின் பல்லை பிடுங்கி தன் கோட்டை வாயலில் பதித்தான் 

இவன் ஒரு சிறந்த வீரன்
 
 
நன்றி 

கொற்கை கொண்கன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்