சேர்ப்பன்

  

 சேர்ப்பு நிலத்தில் வாழ்ந்தவர் சேர்ப்பன் 

சேர்ப்பு நிலம் என்பது ஆறும் கடலும் சேரும் இடம் சேர்ப்பு நிலம் 

இதற்கு சிறந்த உதாரணம் 

தாமிரபரணி கடலில் கலக்கும் கொற்கை (தற்போது புன்னைகாயலில் கலக்கிறது)

காவிரி ஆறு கடலில் கலக்கும் காவிரிபூம்பட்டினம் (புகார்) நகரம்

 வேம்பாறு வைப்பாறு போன்ற

 நெய்தல் நில தலைவரை குறிக்கும் சொல் சேர்ப்பன்

 பரதவர்களின் அரசன் சேர்ப்பன் 

சங்க இலக்கியங்கள் நெய்தல் நிலத்தில் வாழ்ந்தவர்கள் பரதவர் என்றும் பரதவர்களில் அரசர்களை சேர்ப்பன் என்றும் கூறுகிறது

 

ஐந்திணை ஐம்பது

 


5. நெய்தல்

இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.


தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு.
41



"ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், 

இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.

 

 

 

68சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய் !
இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி
நெறிநீ ரிருங்கழிச் சேர்ப்ப னகன்ற
நெறியறிதி மீன்றபு நீ.

[தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த
காலத்துப் பிரிவு நீட்டித்துழித் தலைமகள் வருந்திக் கூறியது.]

(பத.) சிறுமீன் - சிறிய மீன்களே, கவுள் - அலகிடையே, கொண்ட - வைத்துள்ள, 

செம் தூவி - சிவந்த இறகுகளையுடைய, நாராய் - நாரையே ! இறும் - வருந்துதலையுடைய, மெல் - மெல்லிய, குரல - ஒலியினையுடைய, நின் - உன்னுடைய, பிள்ளைகட்கு ஏ - குஞ்சுகளையே, ஆகி - கருதி, மீன் தபு - மீன்களைக் கொல்கின்ற, நீ - (களவுக்காலத்திருந்து எம்மைக் கண்டு கொண்டுள்ள) நீ, நெறி நீர் - அலைந்து செல்லும் நீரினையுடைய,

 இரும் - பெரிய, கழி - கடற்கால்வாய்களையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத்தலைவன், அகன்ற - என்னைவிட்டுப் பிரிந்த, நெறி - முறையினை, அறிதி - நன்கு தெரிவாய். (ஆகலின், நீயே எனக்குற்ற சான்றாகுவை, என்று தலைமகள் நாரையினை நோக்கி நலிந்து கூறினாள்.)

 இருங்கழி என்பது ஆறு மற்றும் கடலின் கழி நிலங்களை குறிக்கும் சேர்ப்பன்

நன்றி

கொற்கை கொண்கன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்