தென்தென்பரதவர் போரேறே

 தென்பரதவர் போரேறே

 

நட்டவர் குடி உயர்க்குவை;          
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்             
சீருடைய விழுச் சிறப்பின்,   
       
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்,    135
இலங்கு வளை, இருஞ் சேரி,     
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து,
நல் கொற்கையோர் நசைப் பொருந!
 
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,    
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,               140
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,   
புலவு வில்பொலி கூவை,    
      
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போரேறே!          
 
  விளக்கம்
 
  • வேந்தே! நீ உன்னோடு நட்பு கொண்ட அரசர்களின் குடியை உயர்வடையச் செய்வாய்.
  • உன்னோடு பகை கொண்ட அரசர்களைப் பெயர்த்தெரிவாய்.
கொற்கை பேருலகத்தில் பெயர்பெற்று மேலோங்கி நிற்கிறது.
அதற்குக் காரணம் சீரும் சிறப்பும் மிக்க முத்து விளையும் சங்குகள் அங்கு விளைவதுதான்.

  • கொற்கைத் துறைமுகத்துச் சேரியில் வாழும் பரதவர் செல்வ வளத்தில் கள்ளுண்டு களிப்பினும் உன்னை (நெடுஞ்செழியனை) அடையும் ஆசையோடு இருக்கின்றனர்

  • இப்படி கொற்கை மக்களின் ஆசையை நிறைவேற்றியவன் 

  •  
  • தென்பரதவர் போர்த்திறம் மிக்கவர்.

  • பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்கே சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர்.

  • அவர்கள் பகைவரின் கொழுப்பைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் கூவைக் குடிசையில் சார்த்தியிருப்பர். 
  • ஊரில் ஒன்று கூடித் தம் பெருமையைப் பேசி ஒலித்துக் கொண்டிருப்பர். 

  • ஒரே மொழின் ஒலி இருப்பின் 

  • தென்பரதவர் சிங்கமே
  •  
  •  நன்றி 
  • கொற்கை கொண்கன்
 
 
 
 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்